Class 10th General Exam: Few Ways to Succeed!
Class 10th General Exam: Few Ways to Succeed!

10-ஆம் வகுப்பு பொது தேர்வு: வெற்றிக்கு சில வழிகள்!

Updated on
2 min read

தேர்வுகளைத் திருவிழா என்று குறிப்பிடுவார் இறையன்பு ஐ.ஏ.எஸ். அத்தனை மகிழ்ச்சியுடன் அதனை நாம் கொண்டாட வேண்டும்.

தேர்வில் குறைந்தபட்சமாகத் தேர்ச்சி மதிப்பெண்கள் பெறுவதற்குக் கேட்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க முயற்சி செய்வது முதல் ரகசியம்.
 

சமூக அறிவியல் பாடம் எல்லாவற்றையும்விட எளிது. 8-ஆம் வகுப்பில் இருந்து பயிற்சி பெற்று வரும் இந்திய வரைபடம், உலக வரைபடம் இவற்றுக்கு 13 மதிப்பெண்கள் கிடைக்கும்.  

10 இரண்டு மதிப்பெண் வினாக்களையும், 10 ஐந்து மதிப்பெண் வினாக்களையும் முழுமையாக எழுத முயற்சி செய்திருந்தாலே, உங்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் கிடைத்துவிடும்.

முழு மதிப்பெண் பெற! - 100 மதிப்பெண்கள் எடுக்கக் கூடுதல் வினாக்களையும் படித்துவிட வேண்டும்.

பாடப் பகுதியின் உள்ளே இருக்கும் ‘உங்களுக்குத் தெரியுமா?’ பகுதியையும் பெட்டிச் செய்திகளையும் அவசியம் படித்துக் கொள்வது நூற்றுக்கு நூறு பெற உதவும். 

கட்டாய வினாவுக்கு அவசியம் விடை எழுத வேண்டும், அதைத் தவிர்த்து சாய்ஸில் உள்ள வேறு வினாக்களைத் தேர்வு செய்யக் கூடாது.
 

பொதுவாக சில: தேர்வில் ஒவ்வொரு விடையையும் எழுதி முடித்தவுடன் அதைக் கோடு போட்டு வேறுபடுத்திக் காட்டுவது அவசியம். 

அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவது, கேட்டிருக்கக்கூடிய இடங்களில் உரியப் படங்கள் வரைவது போன்றவை மூலம் உங்களுக்கு முழு மதிப்பெண் சாத்தியமாகும். 
 

முக்கியமாக, ஒரு பாடத் தேர்வு எழுதி முடித்தவுடன் அடுத்த தேர்வுக்குத் தயாராகி விடுங்கள். எழுதி முடித்த பாடத்தைப் பற்றி விவாதம் செய்ய வேண்டாம். | தகவல்கள்: ஆதலையூர் சூரியகுமார் 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in