night time exercise?
night time exercise?

இரவு நேர உடற்பயிற்சி நல்லதா?

Updated on
2 min read

உடற்பயிற்சி ஆரோக்கியமானது. ஆனால், உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் முக்கியமானதல்லவா? இரவு நேர உடற்பயிற்சி குறித்து சில எச்சரிக்கைகளை மருத்துவர்கள் விடுக்கின்றனர். 

அறியாமையினால் ஒருவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சியானது தூக்கத்தைப் பாதித்து உடல்நலப் பாதிப்புக்கு அழைத்துச் செல்லும் எனச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரவு நேர உடற்பயிற்சி நிச்சயம் தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், உடல் வெப்பநிலையை அதிகரித்து அட்ரினலின், எண்டார்ஃபின் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.

“எண்டார்ஃபின் ஹார்மோன்களின் அதிகரிப்பால் உடற்பயிற்சிக்குப் பின் உறக்கம் வருவது தாமதமாகிறது” என்று கூறப்படுகிறது.

உறக்கம் தாமதமானால் உறங்குவதற்கு முன் இதமான நீரில் குளிப்பது நன்மை தரும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

ஆய்வு ஒன்றில் படுக்கைக்குச் செல்வதற்கு 4 முதல் 5 மணி நேரத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் மிதமான உடற்பயிற்சி தூக்கத்தைத் தொந்தரவு செய்யாது என்று கண்டறிந்துள்ளனர்.

மற்றொரு ஆராய்ச்சி முடிவில், இரவில் நீண்ட நேரம் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் உறக்கத்தை மிக மோசமான அளவில் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in