Black Vulture
Black Vulture

இணை பிரியாத பாறு கழுகுகள்!

Updated on
2 min read

ஒருவனுக்கு ஓருத்தி என்று இணைபிரியாமல் சோடியாகச் சேர்ந்து வாழ்ந்து வரும் பறவை இனங்களை அறிவீர்களா? 

Bald Eagle, Black Vulture, Laysan Albatross, Mute Swan, Scarlet Macaw, Whooping Crane, California Condor, Atlantic Puffin உள்ளிட்டப் பறவை இனங்கள் சோடியாக வாழ்ந்து வருகின்றன.
 

இதேபோலப் பாறு கழுகு இனத்திலும் இணை சேர்ந்த சோடிகள் பெரும்பாலும் சேர்ந்தே வாழ்கின்றன என்று நம்பப்படுகிறது. 

பாறு கழுகுகள் ஒன்றைவிட்டு ஒன்று பிரிவதில்லை.  இவை இணை சேரும்போது மட்டும் தான் ஆண் எது பெண் எது எனப் பிரித்தறிய முடியும். 

ஆணுக்கெனத் தனித்த அம்சம் ஏதும் இவ்வினத்தில் இல்லை. முட்டையை அடைகாப்பதிலிருந்து அதைப் பராமாறிப்பது வரை ஆண் பெண் இரண்டுமே சேர்ந்தே கவனிக்கின்றன. 

மஞ்சள் முகப்பாறு ஆண் துணை இன்றி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இயல்புடையது என்று நம்பப்பட்டதால் எகிப்து நாட்டில் இவை புனிதமாகக் கருதப்பட்டது. | தகவல்கள்: சு.பாரதிதாசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in