Can eating chocolate cause pimples wa explained
Can eating chocolate cause pimples wa explained

சாக்லேட் சாப்பிட்டால் பருக்கள் கூடுமா?

Updated on
2 min read

பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லேட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. 

முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் விரைவில் குணமாகும்.

உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடும். இதன் அடுத்தக்கட்ட விளைவாக பருக்கள் அதிகரிக்கும். 

ஒயிட் சாக்லேட், டார்க் சாக்லேட், மில் சாக்லேட் எனச் சாக்லேட்கள் மூன்று வகைப்படும். எல்லாச் சாக்லேட்களும் கொழுப்புச் சுரங்கம்தான். 

சாக்லேட்டில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகம். 100 கிராம் சாக்லேட்டில் 23 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. 

100 கிராம் சாக்லேட்டில் 30 - 40 கிராம் கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்பு செறிவுற்ற கொழுப்பு (Saturated fat) வகையைச் சேர்ந்தது, கொழுப்பு அமிலம் மிகுந்தது.

ஆக, எண்ணெய்ச் சுரப்பிகளுக்கு நல்ல ‘தீனி’ கிடைத்துவிடும். இதனால் அவை சீக்கிரத்தில் மூடிக்கொள்ளும். 

எனவேதான் சாக்லட் சாப்பிடுவோருக்கு, ஏற்கெனவே பருக்கள் இருந்தால் அவை அதிகரிக்கும்; புதிதாகவும் பருக்கள் தோன்றும். ஆக, சாக்லேட்டைத் தவிர்ப்பதே நல்லது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in