about some alert notes of butter
about some alert notes of butter

வெண்ணெய் - சில அலர்ட் குறிப்புகள்

Updated on
2 min read

தனி வெண்ணெய் ஆனாலும் சரி, வெண்ணெய் கலந்த உணவுகள் ஆனாலும் சரி காலையில் எழுந்ததும் சாப்பிடக் கூடாது. இரவிலும் சாப்பிட வேண்டாம். 

காலையில் வெண்ணெய் உணவு சாப்பிட்டால் பசியைக் குறைத்துவிடும், வயிறு மந்தமாகிவிடும். பிறகு காலை உணவைச் சரியாகச் சாப்பிட முடியாது.

இரவில் வெண்ணெய் உணவு சாப்பிட்டால், செரிமானம் குறைந்து உறக்கம் கெடும். வெண்ணெய் கலந்த உணவுகளை மதிய நேரங்களில் சாப்பிடுவதுதான் நல்லது.

இளம் வயதினர், உடல் மெலிந்தோருக்கு நிறைய கலோரிகளும் ஊட்டச்சத்தும் தேவை என்பதால் வெண்ணெய் கலந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் ஒல்லியாக இருப்பதால் வெண்ணெயை மதிய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் 5 முதல் 10 கிராம் வரை வெண்ணெயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

அளவுக்கு அதிகமாக வெண்ணெய் சாப்பிடுதல் நல்லதில்லை. இதன் கொழுப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து இதயம், மூளை, ரத்தக் குழாய் சார்ந்த பிரச்சினைகள் தரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in