about strategies followed by the rich peoples
about strategies followed by the rich peoples

பணக்காரர்கள் பின்பற்றும் உத்திகள் என்னென்ன?

Updated on
2 min read

“அதிகரிக்கும் வருமானத்துக்கு ஏற்ப, ஒருவரது செலவுகளும் தொடர்ந்து அதிகரிக்கும்” என்கிறார் பார்கின்சன். 

அதாவது, “ஒருவர் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறாரோ அதைவிட சற்று அதிகமாகவே அவர் செலவழிப்பார்” என்கிறார் பார்கின்சன். 

“வருமானம் கூடும்போது, அதில் 50% மட்டுமே தன் பணம் என எண்ணி பணக்காரர்கள் செலவழிப்பர். மீதி 50%-ஐ எதிர்காலத்துக்காக சேமிப்பர்” என்கிறார் பிரையன் ட்ரேசி.

இஎம்ஐ. முறை போல பணக்காரர்கள் வங்கிகளுக்கு சேமிப்புக்கும், ஸ்டாண்டிங் இன்ஸ்டிரக்‌ஷன் கொடுத்து விடுகிறார்கள். தானாகவே சேமிப்புக்கு பணம் சென்றுவிடும்.

பணக்காரர்கள் எந்தப் பொருளை வாங்கும் போதும் பேரம் பேசத் தவறுவதில்லை. பேரம் பேசுவதால் தங்கள் மதிப்பு குறைந்துவிடும் என்று எண்ணுவதும் இல்லை.

அதிக விலை உள்ள பொருள் வாங்குவதை பணக்காரர்கள் தவிர்க்கவே விரும்புகிறார்கள். 2-வது அல்லது 3-வது விலையில் உள்ள பொருள்களை மட்டுமே வாங்குவர்.

பணக்காரர்கள் ஒருபோதும் தேவையற்ற பொருட்களை வாங்குவதே இல்லை. அவசியமானவற்றை மட்டுமே அவர்கள் வாங்குவர்.

வருமானம் தராத எந்தப் பொருளையும் நாம் கடனில் வாங்குவது என்பது நமக்கான கூடுதல் செலவையே ஏற்படுத்தும் என்பது பணக்காரர்களின் எண்ணம்.

பணக்காரர்கள் எப்போதும் ஏழைகளைப் போல வாழ்கிறார்கள். ஆனால், பணக்காரர்களைப் போல அவர்கள் சேமிக்கிறார்கள்.

குறைவாகப் பணம் சம்பாதிப்பதில் தவறில்லை. ஆனால் அதிகம் செலவழிக்கக் கூடாது என்பது பணக்காரர்களுக்குத் தெரியும்.

ஆரம்ப காலத்தில் ஏழை போல குறைந்த தேவையுடன் வாழப் பழகினால், ஓய்வுக்குப் பின், யாரையும் எதிர்பார்க்காமல் பணக்காரர் போல் ‘ஜம்’மென வாழலாம்.”

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in