Adbout kidney stone tips
Adbout kidney stone tips

சிறுநீரகக் கல் - வாழைத் தண்டுச் சாறு நல்லதா?

Updated on
2 min read

சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என்றதும் வாழைத் தண்டுச் சாறு, முள்ளங்கிச் சாறு குடிக்கத் தொடங்கிவிடுவார்கள். இந்த முறைகள் சரியானவையா?

சிறுநீரகக் கல்லின் அளவு, அதன் வடிவம், அந்தக்கல் எந்த இடத்தில் உருவாகியிருக்கிறது என்பது போன்ற பல விஷயங்களைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படும்.

சிறுநீரகக் கல் பிரச்சினைக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்கேன் எடுத்து, சிறுநீரகக் கல்லின் அளவுக்கு ஏற்றவாறும், வலிக் கேற்றவாறும் சிகிச்சை அளிக்கப்படும்.

சிறுநீர் வெளியே செல்லும் பாதையில் கல் சிறிதாக இருக்கும்போது, கைவைத்திய முறைப்படி முள்ளங்கிச் சாறு குடித்துச் சரிசெய்துவிடலாம்.

ஆனால், வாழைத் தண்டுச் சாறு, முள்ளங்கிச் சாறு வழிமுறை ஒருவருக்குச் சரியானதாக இருந்தால், மற்றவருக்கும் சரியாக இருக்கும் என உறுதியாகக் கூற முடியாது.

எனவே, சிறுநீரகக் கல் பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி, ஸ்கேன் மூலம் தீவிரத்தை அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in