fasting and health alrets
fasting and health alrets

உண்ணாமல் இருந்தால் உடல் இளைக்குமா?

Updated on
2 min read

‘அடிக்கடி உண்ணாவிரதம் இருந்தால் உடல் இளைத்துவிடும்’ என்று சொல்வது சரியில்ல. மருத்துவ அறிவியல்படி உடல் இளைப்பதற்காக உண்ணாவிரதம் இருப்பது தவறு. 

உண்ணாமல் இருப்பது உடல் நலனை பல வழிகளில் பாதிக்கும். குறிப்பாக, நீர் அருந்தாமல் இருப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும்; சிறுநீரக செயல்பாட்டில் பிரச்சினை ஏற்படும்.
 

பொதுவாக இரவு 10 மணிக்கு பிறகு எந்த உணவையும் பெரும்பாலோர் சாப்பிடுவதில்லை, உறங்கிவிடுகிறோம். இது இயற்கை செயல்பாடு என்பதால் பாதிப்பும் ஏற்படாது. 
 

காலை உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். ஆனால், பலரும் உடல் எடையைக் குறைக்கக் காலை உணவைத்தான் தவிர்க்கின்றனர். இது மிகவும் தவறான பழக்கம்.

மதியம் நிறைய பசி எடுக்கும்போது, உணவை நன்கு மெல்லாமல் அவசர அவசரமாகவும் சாப்பிடுவதால் ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏற்படும்.
 

அடிக்கடி சாப்பிடாமல் இருக்கும்போது ‘ஹைப்போகிளைசீமியா’ எனும் ரத்தச் சர்க்கரை குறையலாம். கை, கால் நடுக்கம், உடல் வியர்ப்பது, மயக்கம் வரலாம். 
 

உடல் பருமனாக இருப்பவர்கள் முதலில் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அந்த அடிப்படைக் காரணத்துக்குச் சிகிச்சை எடுக்க வேண்டும். 
 

உணவுமுறையைச் சீராக்க வேண்டும். தினமும் 2,000 கலோரி தரும் உணவு தேவை. இதை, 2 முதல் 3 மணி நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக உணவு உண்ணலாம்.

அரிசி - தானிய உணவின் அளவைக் குறைத்துக்கொண்டு காய்கறி, பழங்களை அதிகமாக உட்கொள்வது நல்லது. நொறுக்கு தீனிகளை தவிர்க்கலாம்.

காபி, தேநீர், குளிர்பானங்களை குறைக்க வேண்டும்.  காலை நேரத்தில் 45 நிமிடங்களுக்கு நடப்பது, நீச்சலடிப்பது போன்ற உடற்பயிற்சிகள் அவசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in