ulcer treatment
ulcer treatment

‘அல்சர்’ பிரச்சினை: காரணங்கள் என்னென்ன?

Updated on
2 min read

இன்றைய வாழ்க்கைச் சூழலில், நம்மில் பலருக்கும் வயது வித்தியாசமின்றி வரக் கூடிய ஆரோக்கியப் பிரச்சினைதான் ‘அல்சர்’. இதற்கான காரணங்கள்...
 

காரம், புளிப்பு, மசாலா, உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுதல்

மது அருந்துதல், புகைபிடித்தல், மென் குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பதலும் அல்சருக்கு வழிவகுக்கும். 

ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவதும் முக்கிய காரணம். 

உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற பழக்கங்கள்  இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பாக அமைகின்றன.
 

சுகாதாரமற்ற குடிநீர், கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களாலும் அல்சர் வரக் கூடும். 

மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்றவையும் இரைப்பைப் புண் வருவதைத் தூண்டுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in