Thyrocare Velumani shares tips about business
Thyrocare Velumani shares tips about business

ரூ.2 லட்சம் to ரூ.5,000 கோடி: தைரோகேர் வேலுமணி பகிர்வுகள்

Updated on
2 min read

ஆரோக்கியசாமி வேலுமணி 1996-ல் ரூ.2 லட்சத்தில் தைரோகேர் நிறுவனத்தை 2021-ல் விற்றது ரூ.5,000 கோடிக்கு. அவர் பகிர்ந்தவை...

“நான் ஒருபோதும் பெரிய இலக்கு வைத்துக் கொண்டதில்லை. என்னிடம் இப்போது இருப்பதைவிட கூடுதலாக ஒரு பூஜ்ஜியம் சேர்ப்பதே இலக்கு.”

“ரூ.10 லட்சம் சொத்து மதிப்பு இருந்தபோது என் இலக்கு ரூ.1 கோடி. அதை அடைந்த பின் இலக்கு ரூ.10 கோடி. இப்படித்தான் ரூ.5,000 கோடியை எட்டினேன்.”

“நடக்கத் துணிந்தால்தான் பாதை தெரியும். பாதை தெரிந்தால்தான் நடப்பேன் என்று சொன்னால், நம்மால் எங்கும் செல்ல முடியாது.”

“தைரியமாக செயலில் இறங்க வேண்டும். அது நம்மை வழிநடத்தும். செயலின்மை நம்மை முடக்கிவிடும்.”

“ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பது நான் உணர்ந்துகொண்ட அடிப்படைப் பாடம்.”

“ஊழியர்களை மரியாதையுடன் நடத்தினால், அவர்களும் நேர்மையாக நடந்துகொள்வார்கள்.”

“குறைந்த விலையில் சேவை வழங்குங்கள். ஒருபோதும் தோல்வியடைய மாட்டீர்கள்!” என்றார் தைரோகேர் வேலுமணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in