What can be done to prevent snoring?
What can be done to prevent snoring?

குறட்டையை தடுக்க என்ன செய்யலாம்?

Updated on
2 min read

நாம் சுவாசிக்கும் காற்று மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. இதில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.

சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, அடினாய்டு தைராய்டு பிரச்சினை, உடல் பருமனால் குறட்டை ஏற்படலாம்.

புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவதாலும் குறட்டை ஏற்படுவதுண்டு. குறட்டைய தடுக்கும் வழிகள்...

தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும். மல்லாக்கப் படுக்க வேண்டாம். ஒரு பக்கமாக தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.

உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும். தைராய்டு பிரச்சினைக்கு மருந்து சாப்பிட வேண்டும்.

மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். தேவையில்லாமல் தூக்க மாத்திரை சாப்பிடக் கூடாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in