Actress Sreeleela Latest Album
Actress Sreeleela Latest Album

ஒரு ஊரில் அழகே உருவாய்... ஸ்ரீலீலா க்யூட் க்ளிக்ஸ்!

Updated on
2 min read

தெலுங்கிலும், தமிழிலும் கவனத்துக்குரிய நாயகியாக உருவெடுத்துள்ள ஸ்ரீலீலாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

2019-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்’ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஸ்ரீலீலா.

2021-ல் வெளியான ‘பெல்லி சண்டாடி’ தெலுங்கு படத்தில் நடித்தார்.

2022-ல் வெளியான ‘ஜேம்ஸ்’ கன்னட படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார்.

2022-ல்  ரவிதேஜாவின் ‘தமாகா’ படத்தின் பாடல் ஒன்றில் அவர் ஆடிய நடனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படம் மூலம் வெற்றிப் பட நாயகிகள் வரிசையில் இணைந்தார்.

சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வரும்‘புஷ்பா 2’ படத்தில் சிறப்பு நடனமாடி கவர்ந்தார் ஸ்ரீலீலா.

நிதின் உடன் இணைந்து ஸ்ரீலீலா நடித்துள்ள தெலுங்கு படமான ‘ராபின்ஹுட்’ மார்ச் 28-ல் ரிலீஸாகிறது.

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ‘புறநானூறு’ படத்திலும் இணைந்துள்ளார் ஸ்ரீலீலா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in