Actress Tamannaah Latest Click
Actress Tamannaah Latest Click

ராஜா மகள்... ரோஜா மகள்... தமன்னா வசீகர க்ளிக்ஸ்!

Updated on
2 min read

‘மகாராணி’ தோற்றத்தில் நடிகை தமன்னா சமீபத்தில் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

கடைசியாக தமன்னாவை தமிழில் ‘அரண்மனை 4’ படத்தில் தாய் கதாபாத்திரத்தில் பார்த்தார்கள் தமிழ் ரசிகர்கள்.

முன்னதாக ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவலய்யா’ பாடலில் நடனத்தில் மிரட்டியிருந்தார்.

தமன்னா நடிப்பில் இந்தியில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது.

அதன்பின், நீரஜ் பாண்டே இயக்கத்தில் தமன்னா நடித்திருந்த ‘சிகந்த கா முகாதர்’ நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி கவனம் ஈர்த்தது. 

இந்த ஆண்டு தமன்னா நடிப்பில் ‘ஒடேலா 2’ திரைப்படம் வெளியாகிறது.

‘ஒடேலா 2’ படத்தில் சிவன் பக்தராக நடித்துள்ளார் தமன்னா.

2006-ம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தவர் தமன்னா.

‘கல்லூரி’, ‘படிக்காதவன்’, ‘அயன்’, ‘சூறா’ என பல படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தமிழில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அவரது அடுத்த தமிழ்ப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 

சமூக வலைதள பக்கங்கள் மூலம் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை ஈர்ப்பதில் தமன்னா ஆர்வம் காட்டுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in