Actress Meenakshi Chaudhary Latest Click
Actress Meenakshi Chaudhary Latest Click

மகிழ்ச்சி பொங்கும் மீனாட்சி சவுத்ரி க்ளிக்ஸ் அணிவகுப்பு

Updated on
2 min read

விஜய் ஆண்டனியின் ‘கொலை’, ஆர்ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’, விஜய்யின் ‘த கோட்’ படங்களில் நாயகி மீனாட்சி சவுத்ரி. 

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் மீனாட்சி சவுத்ரி.

வெங்கடேஷுடன் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ என்ற தெலுங்கு படம் பொங்கல் ரிலீஸ். 
 

‘சங்கராந்தி வஸ்துன்னம்’ புரமோஷனில் கலந்துகொண்ட மீனாட்சி சவுத்ரி, ‘த கோட்’ வெளியான பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
 

“கோட் படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டேன். இதனால் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது” என்றார். 

“ஒரு வாரம் பாதிக்கப்பட்டேன். ஆனால், நான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் என் நடிப்பு பாராட்டப்பட்டது” என்றார். 

“இனி நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்று அப்போதுதான் முடிவு செய்தேன்” என்றார் மீனாட்சி சவுத்ரி.
 

பொங்கல் பண்டிகையை ஒட்டி, அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in