HMPV virus - எளிய தடுப்பு வழிகள்

ஹெச்எம்பி வைரஸ் தொற்று பொதுவாக சாதாரண நோய் நிலையை உருவாக்குவதால் பிரத்யேக வைரஸ் கொல்லி மருந்துகளோ, தடுப்பூசியோ இதுவரை இல்லை.

ஹெச்எம்பி வைரஸ் காரணமாக காய்ச்சல், சளி, இருமல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு போன்ற சாதாரண அறிகுறிகள் மட்டுமே ஏற்பட்டுக் குணமடையும்.

குழந்தைகளின் நெஞ்சுப் பகுதி உள்ளிழுத்து மூச்சு விடுதல், குழந்தை மூச்சு விடும்போது குறட்டைச் சத்தம் கேட்பது இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம், தலை சுற்றல், உள்ளங்கை, பாதம் நீல நிறமாக மாறினால் உடனே கவனிகக் வேண்டும்.

ஹெச்எம்பி வைரஸ், இதர தொற்றுகள் போலவே இருமல், தும்மல் மூலம் சளித் துகள்கள், காற்றில் பறந்து அதை சுவாசிப்போருக்கு பரவுகிறது.

சுகாதாரமற்ற இடங்களில் கை வைப்பதன் மூலம் கையில் தொற்றுப் பட்டு அதை மூக்கிலும் வாயிலும் வைப்பதன் மூலம் ஹெச்எம்பி வைரஸ் பரவுகிறது.

நோயாளிகள் உடுத்திய, பயன்படுத்திய துணிகள் ஆகியவற்றிலும் வைரஸ் கிருமிகள் சில மணி நேரம் வாழும். அவற்றைத் தொடுவதன் மூலமும் பரவுகிறது.

ஹெச்எம்பி வைரஸ் தொற்று உடன், குளிர் காலங்களில் பரவும் வைரஸ் தொற்றுகளில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...

இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டை அவசியம். கைகளை அடிக்கடி சோப் போட்டுக் கழுவ வேண்டும். கண்ட இடங்களில் கைகளை வைப்பது, சாய்வது கூடாது.

குளிர்காலங்களில் அத்தியாவம் அல்லாத பயணங்களை குழந்தைகள், முதியோர்கள், இணை நோய்கள் கொண்டவர்கள் தவிர்ப்பது நல்லது.

வெளியே செல்லும்போதும், கூட்டமுள்ள இடங்களில் பயணிக்கும்போதும், மருத்துவமனைகளுக்குச் செல்லும்போதும் முகக்கவசம் அணிவது அவசியம்.

நியூமோகாக்கல் தடுப்பூசி, ஃபுளூ தடுப்பூசி பெற்றுக்கொள்வது குளிர்கால வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.

காய்ச்சல் ஏற்பட்டால் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது தொற்றுப் பரவலைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கை ஆகும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

Web Stories

மேலும் படிக்க...