மெட்ராஸ்காரன் - ப்ளஸ், மைனஸ் என்ன?
வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் ஷேன் நிகாம், கலையரசன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் இது...
ஆட்டம், பாட்டம் என திருமண வீட்டில் இருந்து தொடங்கும் முதல் பாதிப் படம், விபத்துக்குப் பின் நடக்கும் சங்கிலித் தொடர் திருப்பங்களால் முடிந்ததே தெரியவில்லை.
நாயகன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு உறவுகள், நண்பர்களை நிம்மதி இழக்கச் செய்த கதையின் முக்கியச் சம்பவத்தில், முடிச்சு அவிழும் தருணங்கள் பழைய அவியல்.
நாயகனுக்கும் வில்லனுக்குமான மோதலும் விலகலும் முன்னிறுத்தும் உணர்வு பாராட்டும்படி அமைக்கப்பட்டு இருப்பது கவனம் ஈர்க்கும் ப்ளஸ் பாயின்ட்.
கதையின் முக்கியச் சம்பவம் நிகழத் தூண்டுகோலாக இருக்கும் நாயகி கதாபாத்திரம், 2-ம் பாதியில் பெரிதாக பங்கு வகிக்காதது விறுவிறு திரைக்கதையில் ஒரு மைன்ஸ்.
நாயகன் ஷேன் நிகம் மலையாள வாசனை வீசும் தமிழ் பேசினாலும் நடிப்பில் முத்திரையைப் பதிக்கிறார். துரை சிங்கமாக வரும் கலையரசன் சிறப்பாக பங்களித்துள்ளார்.
மீராவாக வரும் நிஹாரிகா நடிப்பிலும் நடனத்திலும் கவர்கிறார். ஐஸ்வர்யா தத்தா திறமையைக் காட்ட இறுதிக்கட்ட காட்சி கைகொடுக்கிறது.
புதுக்கோட்டை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை அழகாகப் பதிவு செய்து கதைக் களத்தை உணர வைத்த ஒளிப்பதிவு முக்கியமான ப்ளஸ்.
அழுத்தமான முக்கிய சம்பவத்தைக் கொண்ட கதையில் 2-ம் பாதியில் தேவையற்ற நீட்டல்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் எங்கேஜிங்காக இருந்திருக்கும் ‘மெட்ராஸ்காரன்’.