லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ - பாதிப்பு என்ன?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படை வீரர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 4 நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
லாஸ் ஏஞ்சல்ஸில் 10,000+ வணிக கட்டிடங்கள், 30,000+ வீடுகள் காட்டுத் தீயில் எரிந்து நாசமாகின. ரூ.13 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜன.7-ல் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ அதிவேகமாக பரவி ஈட்டன், ஹர்ஸ்ட், லிடியா ஆகிய பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது சுமார் 40,000 ஏக்கர் பரப்பில் பற்றி எரிகிறது. இதில் 29,000 ஏக்கர் பகுதி முழுமையாக தீயில் கருகிவிட்டன.
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ தொடர்பாக பகிரப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
7,500+ வீரர்கள் இரவு, பகலாக தீயை அணைக்க போராடுகின்றனர். ஹெலிகாப்டர்கள், சிறப்பு விமானங்கள் மூலமும் தீயை அணைக்கும் முயற்சி நடக்கிறது.
இக்கட்டான சூழலை பயன்படுத்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பல இடங்களில் ஊரடங்கு அமலானது.
காட்டுத் தீ ஏற்பட்டபோது சுமார் 70 கி.மீ. முதல் 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் அதிவேகமாக தீ பரவியது.
காற்றின் வேகம் மேலும் அதிகரிப்பதால் கலிபோர்னியா மாகாணத்தின் பல பகுதிகளுக்கு காட்டுத் தீ பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.