கேம் சேஞ்சர்: ப்ளஸ், மைனஸ் என்ன?
‘பிரம்மாண்ட’ இயக்குநர் ஷங்கர் - ‘ஆர்ஆர்ஆர்’ நாயகன் ராம் சரண் காம்போவில் வெளிவந்த ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ப்ளஸ், மைனஸ் பார்ப்போம்...
ஷங்கரின் ‘அரசியல்’ பார்வையுடன் ‘தெலுங்கு மசாலா’ சரிவிகிதத்தில் கலந்திருப்பது, ஆங்காங்கே எங்கேஜிங்காக கைகொடுத்து உள்ளது.
எந்தப் புதுமைகளும் இல்லாமல் எளிதில் யூகிக்க கூடிய தட்டையான திரைக்கதை மைனஸ். பாடல்களில் மட்டுமே ஷங்கரின் ‘டச்’ நிறைய.
எஸ்.ஜே.சூர்யா, ராம்சரண் தொடர்பான காட்சிகள் அடுத்தடுத்து சற்றே விறுவிறுப்புடன் நகர்வது ப்ளஸ். குறிப்பாக, இடைவேளை காட்சிகள் அட்டகாசம்.
ராம சரண கேரக்டர் பக்கா தான் என்றாலும், நாயகி கியாராவுக்கு பாடல் காட்சிகளைத் தவிர பெரிய வேலை எதுவும் இல்லை.
வில்லன் கேரக்டர் என்றாலே அல்வா சாப்பிடுவது போல அதகளம் காட்டும் எஸ்.ஜே.சூர்யா, இந்தப் படத்தில் செமத்தியாக ஸ்கோர் செய்கிறார்.
நல்ல திரை அனுபவம் தரக் கூடிய இரண்டாம் பாதியில் வரும் 25 நிமிட ஃப்ளாஷ்பேக் காட்சிகள்தான் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.
ஃப்ளாஷ்பேக் காட்சிகளுக்குப் பிறக்கு மீண்டும் பக்கா தெலுங்கு மசாலா பாணிக்கு திரும்பி, ஒருவழியாக முடிவது மைனஸ்.
திரைக்கதையில் ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் மலிந்து கிடப்பது இயக்குநர் ஷங்கருக்கு மிகப் பெரிய சறுக்கல்.
‘ஷங்கர் படம்’ என்ற எதிர்பார்ப்பின்றி, ‘கேம் சேஞ்சர்’ பார்ப்போருக்கு நல்ல தெலுங்கு மாஸ் மசாலா படம் பார்த்த திருப்தி கிட்டலாம்.