தூக்கம் ‘இழக்கும்’ குழந்தைகள் - அலர்ட் குறிப்புகள்

உலகளவில் 80% குழந்தைகள், தூக்கமின்மைக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தூக்கமின்மையானது உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் நமது அன்றாடச் செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  

முதியவர்களிடம் பரவலாகக் காணப்பட்ட தூக்கமின்மைக் கோளாறு தற்போது குழந்தைகள், பதின்பருவத்தினரிடம் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  

அதிக நேரம் தொலைக்காட்சி, திறன்பேசி, வீடியோ கேம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதால் இரவில் குழந்தைகள் சரியான நேரத்தில் தூங்குவதில்லை.  

துக்கமின்மை காரணமாகப் பகலில் உறங்குவது, சோர்வடைதல், நினைவாற்றல் குறைவது, கவனமின்மை, கல்விசார் செயல்திறனில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.   

துக்கமின்மை மன அழுத்தம், பதற்றம் போன்ற மனநலம் சார்ந்த பாதிப்புகளுக்குத் தூக்கமின்மை காரணமாகிறது.  

குழந்தைகளுக்குக் கூடுதல் தூக்கம் தேவை. தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இடையறாத தூக்கம் அவசியமானது.   

தூக்கத்தினால் மூளைக்குப் போதுமான ஓய்வு கிடைக்கும்போது பிற செயல்பாடுகளில் அது புத்துணர்வுடன் இயங்கும். | தகவல்கள்: மாயா  

Web Stories

மேலும் படிக்க...