இவை பி.ஜெயச்சந்திரன் பாடல்களா? - ‘தாலாட்டுதே வானம்’...

திரை இசை உலகின் மகத்தான பாடகர் பி.ஜெயச்சந்திரன், கேரளாவின் திருச்சூரில் காலமனார். அவருக்கு வயது 80.

மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியவர். அவரது குரலில் மறக்க முடியாத தமிழ்ப் பாடல்கள்...

1976-ல் ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஜெயச்சந்திரன் ‘வசந்த கால நதிகளிலே’ பாடல்கள் வெகுவாக கவனம் ஈர்த்தது.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ‘மாஞ்சோலைக் கிளிதானோ’ பாடலும் பெரிய வெற்றி பெற்று முன்னணிப் பாடகர் வரிசையில் ஜெயச்சந்திரனை சேர்த்தது.

‘ஒருதலை ராகம்’ படத்தில் ‘கடவுள் வாழும் கோவிலிலே,’ ‘இரயில் பயணங்களில்’ படத்தில் ‘வசந்த காலங்கள்’ ஆகியவை இவரது வெற்றிக் கோலங்கள். 

‘கடல் மீன்கள்’ படத்தில் ‘தாலாட்டுதே வானம்’ என்று எஸ். ஜானகியுடன் சேர்ந்து இசையலைகளை மனத்தில் பாயவைத்தார் ஜெயச்சந்திரன்.

‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் இவர் பாடிய ‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு’ உள்ளிட்ட மூன்று பாடல்களுமே செம்ம ஹிட். 

‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தின் ‘பூவை எடுத்து’, ‘கடலோரக் கவிதைகள்’ படத்தின் ‘கொடியிலே மல்லியப்பூ’ தனித்துவம் வாய்ந்த பாடல்கள்.

‘நானே ராஜா நானே மந்திரி’ படத்தில் பி.சுசீலாவுடன் பாடிய ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ பாடலுக்கு மயங்காதவர் யாருமே இல்லை.

விக்ரமனின் ‘பூவே உனக்காக’ படத்தில் சுஜாதாவுடன் பாடிய ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடலில் இவரது குரல் வசீகரம் சொல்லாமலே புரியும்.

ரஹ்மான் இசையில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’, ‘என் மேல் விழுந்த மழைத் துளியே’ முதலானவை என்றும் திகட்டாதவை.

Web Stories

மேலும் படிக்க...