money savings tip was explained
money savings tip was explained

தூங்கும் போதும் பணம் ஈட்டும் வழிகள்!

Updated on
2 min read

நம் வேலை தவிர்த்து, கூடுதலாக வருவாய் ஈட்ட ஆசைதான். இதைத்தான் ‘பாசிவ் இன்கம்’ (Passive Income) என்று குறிப்பிடுகிறார்கள். 

‘பாசிவ் இன்கம்’ என்றால் ‘செயலற்ற வருமானம்’ என்று பொருள். நம் சேமிப்புப் பணமே, கூடுதல் பணத்தை ஈட்ட வேண்டும், நம் உடல் உழைப்பு எதுவும் இல்லாமல். 

இன்னும் சொல்லப்போனால், நாம் தூங்குகிற போதும் நமது வருமானம் பெருகிக்கொண்டே இருக்க வேண்டும். சரி, கூடுதல் வருமானத்தை ஈட்டுவது எப்படி?

1) நம் சேமிப்பை ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் வருடத்துக்கு 5% - 8% வரை வருமானம் கிடைக்கும். தபால் அலுவலகங்கள், சிறு நிதி வங்கிகளில் கூடுதல் வட்டி கிட்டும்.

அதே சேமிப்புப் பணத்தை பெனிபிட் ஃபண்ட், கார்ப்பரேட் நிறுவனங்களில் டெபாசிட் செய்தால், 9% -12% வருவாய் கிடைக்கும். ஆனால் ரிஸ்க் சற்று அதிகம்.

2) மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து 10% - 25% வரை வருமானம் ஈட்டலாம். இது நீண்ட கால நோக்கிலான முதலீடு.

3) கார்ப்பரேட் நிறுவனங்களில் பிக்சட் டெபாசிட்டாக அல்லாமல், அதன் பங்குகளில் முதலீடு செய்தால் வருடாந்திர டிவிடெண்ட் கிடைக்கும். இதில் ரிஸ்க் உண்டு.

4) இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்தால், பல்வேறு திட்டங்களுக்கு ஏற்ப குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் உண்டு. 

5) உங்கள் வீட்டு மொட்டை மாடி காலியாக இருந்தால் மாடியில் ஒரு ஷெட் போட்டு டியூஷன் சென்டருக்கோ, யோகா சென்டருக்கோ வாடகைக்கு விடலாம்.

காலி மனை இருந்தால், சிறிதளவு முதலீடு செய்து கார் பார்க்கிங் அல்லது குடோனுக்காக வாடகைக்கு விடலாம்.

வாகனங்களில் ஆர்வம் இருக்குமானால், கார் அல்லது சரக்கு வாகனங்களை வாங்கி வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in