mule and donkey
mule and donkey

கோவேறு கழுதை vs கழுதை - ஒரு பார்வை

Updated on
2 min read

கழுதை, கோவேறு கழுதைகளிடமும் பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடியாது. ஆனால் இரண்டும் உருவம், குணம் சார்ந்து வெவ்வேறு விலங்குகள்.
 

கழுதை வீட்டுப் பிராணியாகும். பாதத்தில் பிளவுபடாத குழம்புகளைக் கொண்ட பாலூட்டி. குதிரை போன்ற உடலைமைப்பைக் கொண்டது. 
 

குதிரையைவிட கழுதை உடல் அளவில் சிறியது. கழுதையின் வாலில் ரோமம் குறைவாக இருக்கும். பிடரி மயிரும் கழுதைக்குக் கொஞ்சம்.
 

ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த கலப்பினப் பிராணியே கோவேறு கழுதை.
 

கழுதைகள் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டு குட்டி போடும். கோவேறு கழுதைகள் இனப்பெருக்கம் செய்ய முடியாது.
 

கோவேறு கழுதைகள் வேலைக்குச் சிறந்தவை. கழுதைகளைவிட கோவேறு கழுதைகள் அதிக எடையைத் தாங்குபவை. அதிக எடையை ஏற்றினால் கழுதை மிகவும் கஷ்டப்படும்.

கோவேறு கழுதைகளால் சில அடி உயரத்துக்குக் குதிக்க முடியும். கழுதையால் குதிக்க முடியாது. கழுதைகளைவிட கோவேறு கழுதைகள் புத்திசாலிகள்.
 

கழுதைகளைவிட கோவேறு கழுதைகள் உயரமாக இருக்கும். கழுத்து, பற்களும்கூட கொஞ்சம் பெரியதாக இருக்கும்.
 

கழுதையின் கத்தலையும் கோவேறு கழுதை வெளிப்படுத்தும் சத்தத்தையும் தனி அடையாளம் காண முடியும். கோவேறு கழுதை குதிரையைப் போலக் கனைக்கும்.  | தொகுப்பு: ஷங்கர்  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in