Home
Home

மழைக்கால வீட்டுப் பராமரிப்பு!

Updated on
2 min read

கூரைப் பாதுகாப்பு மற்றும் மழைக்கால வீட்டுப் பராமரிப்பில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
 

வீட்டின் கூரையில் தண்ணீர் கசிந்தபிறகு, அதைச் சீரமைத்துக்கொள்ளலாம் என்று காத்திருக்காமல், ஆண்டுக்கு 2 முறையாவது கூரையின் நிலையைச் சரிபார்ப்பது நல்லது.
 

மாடியின் தரைத்தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலோ, தண்ணீர்க் கசிவுக்கான அறிகுறிகள் சுவரில் தெரிந்தாலோ அதை உடனடியாகச் சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

வீடு கட்டி 20 ஆண்டுகளுக்கு மேலாகியிருந்தால், கட்டுமான கலைஞர்களை அழைத்து அதன் தரத்தைப் பரிசோதித்து கொள்ளவேண்டியது அவசியம். water proofing பண்ணலாம்.
 

வீட்டின் வடிகால் அமைப்பை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் ஒருமுறை முழுமையாகச் சரிபார்த்துவிடுவது பல பிரச்சினைகளைத் தடுக்கும். 
 

வீட்டின் உட்கூரை பகுதிகளிலும், சுவர்களிலும் விரிசல்களோ, நீர்க் கசிவுகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதைப் பரிசோதித்து சீர் செய்யுங்கள்.

கதவுகள், ஜன்னல்களைச் சரியாக மூடமுடிகிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்வதும் நல்லது. அவற்றை மழைக்காலத்துக்கு முன் சரிசெய்துவிடுவது நல்லது.
 

வெளிப்புற கதவுகளில் நீர் விலக்கிகளை (Rain deflectors) பொருத்துவதும் வீட்டுக்குள் மழைத்தண்ணீர் வருவதைத் தடுக்கும். கதவுகள், ஜன்னல்களைச் சரிபார்த்துக்கொள்வதும் நல்லது. 

முக்கியமானது உங்கள் வீட்டைக் காப்பீடு செய்துவைப்பது. இதனால், மழைச் சேதங்கள் பெரியளவில் நம்மை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். 
 

வீட்டையும், வாகனத்தையும் ஏற்கெனவே காப்பீடு செய்திருந்தீர்கள் என்றால், அதைக் காலவதியாகாமல் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். | தொகுப்பு: யாழினி 
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in