Wonderland: Easter Island
Wonderland: Easter Island

சிலைகளுடன் ஒரு மர்மத் தீவு | அதிசய உலகம்

Updated on
3 min read

உலகில் மர்மம் நிறைந்த பகுதிகள் நிறைய உள்ளன. அதில் ஈஸ்டர் தீவும் ஒன்று.

‘மோவாய்’ என்று அழைக்கப்படும் கற்சிலைகள் இங்கு நிறைய உள்ளன. மோவாய் என்பது ‘பறவை மனிதன்’ என்னும் அர்த்தமாம். 
 

பண்டைய கால மூதாதையர்களின் முகங்கள் இவை. இது தொன்மை வாய்ந்த ஒரு மனித இனத்தின் வழிபாட்டுச் சிலை.

பறவை மனிதன் சிலை வழிபாடு தென்கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சிலி நாட்டுக்கு அருகே ஈஸ்டர் தீவில் மிகப் பிரபலமாம்.
 

1200 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பிரம்மாண்டமான சிலைகளை ஈஸ்டர்  தீவு முழுவதும் நிறுவி மக்கள் வழிபட்டதாகக் கூறுகிறார்கள். 
 

சிலைகளை வைப்பதற்காகவே ஈஸ்டர்  தீவில் இருந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. மரம் அழிக்கப்பட்டதால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது.
 

பசியைப் போக்க மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று நர மாமிசம் உண்டு மடிந்தனர் என இத்தீவைப் பற்றிப் பல கதைகள் உலா வருகின்றன.
 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் இருந்தே இத்தீவு துண்டிக்கப்பட்டு மர்ம தேசமாக மாறியதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

மர்மங்கள் நிறைந்த இத்தீவு 1888-ம் ஆண்டுக்குப் பின்புதான் உலகின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது. 

இத்தீவு மக்களின் வாழ்க்கை முறையை முழுவதும் அறிய இப்போதும்கூட தொல்லியல் துறையினர் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈஸ்டர் தீவில் தற்போது வரை 887 மோவாய் சிலைகள்  கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் 10 மீட்டர் உயரத்திலும் 80 முதல் 250 டன் எடையிலும் உள்ளது.

மோவாய் சிலைகளை எப்படி வடித்தார்கள், கற்களை எப்படித் தூக்கி நிறுத்தினார்கள் என்பதற்கெல்லம் துல்லியமான பதில்கள் இல்லை.
 

மனிதர்களே இல்லாமல் சிலைகளுடன் உள்ள ஈஸ்டர் தீவு மர்ம தேசமாகவே இன்றும் நீடிக்கிறது.  | தொகுப்பு: டி. கார்த்திக்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in