raincoat
raincoat

ரெயின் கோட் ரகசியம்

Updated on
2 min read

மழையில் இருந்து நம் உடலைக் காக்கும் ரெயின் கோட் எப்படி வந்தது?

ரெயின் கோட் கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக இருந்தவர் ஃபிரான்சுவா ஃப்ரெஷ்நியூ என்ற பிரெஞ்சு இன்ஜினியர் என்று சிலர் சொல்கிறார்கள்.

நீர் புகாத துணியைக் கண்டுபிடித்து, பெரிய அளவில் ரெயின் கோட் உற்பத்தியைத் தொடங்கியவர் சார்லஸ் மேக்கின்டாஷ் என்ற ஆங்கிலேயர்.

சார்லஸ் மேக்கின்டாஷ் ரெயின் கோட்டை எப்படித் தயாரித்தார்? ரொம்ப சிம்பிள். இரண்டு காட்டன் துணிகளுக்கு நடுவே ஒரு மெல்லிய ரப்பர் வைத்துத் தைத்தார். 

ரப்பரை மென்மையாக்கக் கொஞ்சம் டர்பன்டைனையும் கலந்தார். பின்னர் ரெயின் கோட்டாகத் தைக்க டெய்லரிடம் கொடுத்தார்.

அவ்வளவுதான். சட்டை போல டெய்லர் தைத்துக் கொடுத்தவுடன் தயாராகிவிட்டது ரெயின்கோட். இதுவே மேக்ஸ் என்றழைக்கப்படும் மேக்கின்டாஷ் ரெயின் கோட் வரலாறு.
 

மேக்கின்டாஷ் உடைகள், மழையில் இருந்து உடலைக் காத்தன. ஆனால், மழை நின்று வெயில் அடித்தால் ரப்பர் இளகி உடலோடு ஒட்டும். 

இந்தப் பிரச்சினையை ரப்பரைக் கண்டுபிடித்த சார்லஸ் குட்இயர்தான் பின்னர் தீர்த்து வைத்தார். 
 

இன்று தயாரிக்கப்படும் பெரும்பாலான மழை உடைகள் வேதிப் பொருட்கள் கலந்தவையே. செயற்கை ரப்பரும் பயன்படுகிறது.
 

ரெயின் கோட் இருந்தாலும், மழையில் நனைவது உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்தானே? | தொகுப்பு: டி.கார்த்திக்
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in