African Wonders!
African Wonders!

ஆப்பிரிக்க ஆச்சர்யங்கள்!

Updated on
2 min read

உலகின் இரண்டாவது மிகப் பெரிய கண்டம் ஆப்பிரிக்கா.

உலகின் மிக நீளமான நதியான நைல் நதி இந்தக் கண்டத்தில்தான் ஓடுகிறது.

சாய்ரே, நைஜர், சாம்பேசி என மூன்று பெரிய நதிகளும் இந்தக் கண்டத்தில்தான் இருக்கின்றன.

உலகின் மிகப் பெரிய பாலைவனமான சகாரா இங்குதான் உள்ளது. கலஹாரி, நமீபியா ஆகிய இரு பெரிய பாலைவனங்களும் ஆப்பிரிக்காவிலேயே உள்ளன.
 

 14,300 வெவ்வேறு மொழி பேசும் மக்கள் ஆப்பிரிக்காவில் வசிக்கின்றனர்.
 

இந்தக் கண்டத்தில் இஸ்லாம், கிறிஸ்தவ மக்களே அதிகம் உள்ளனர்.
 

ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய சிகரம் ‘கிளிமாஞ்சரோ’. இதன் உயரம் 5,895 மீட்டர்.

இந்தக் கண்டத்தின் மிகப்பெரிய ஏரி ‘விக்டோரியா’. இதன் பரப்பு 68,800 சதுர கிலோமீட்டர்.

மக்கள்தொகை அடிப்படையில் இந்தக் கண்டத்தில் உள்ள பெரிய நாடு ‘ நைஜீரியா’. 11 கோடியே 50 லட்சம் பேர் இங்கு வசிக்கிறார்கள்.
 

ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நீர் யானை போன்ற அரிய வகை விலங்குகள் இக்கண்டத்தில் மட்டுமே காணப்படுகின்றன. | தொகுப்பு: மு.சுகாராதொண்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in