The largest hot desert in the world!
The largest hot desert in the world!

உலகின் மிகப் பெரிய வெப்ப பாலைவனம்!

Updated on
2 min read

சஹாரா பாலைவனம் வட ஆப்பிரிக்காவில் உள்ளது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து செங்கடல் வரை வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. 
 

சஹாரா 3,629,360 சதுர மைல்கள் பரப்பளவும், கிழக்கிலிருந்து மேற்காக 4,800 மைல்கள் நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 1,118 மைல் அகலமும் கொண்டது. 
 

சஹாரா ஒரு நாடாக இருந்தால், அது உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இருக்கும். பிரேசிலைவிடப் பெரியது, அமெரிக்காவைவிடச் சற்று சிறியது.
 

சஹாரா பாலைவனம் கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை 100.4 °F வரை இருக்கும். சில பகுதிகளில் வெப்பநிலை தொடர்ச்சியாகப் பல நாள்களுக்கு அதிகமாக இருக்கும்.
 

சஹாரா சூடாகவும் வறண்டதாகவும் இருக்கும். பகலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், இரவில் வெப்பநிலை வேகமாகக் குறையும். சில நேரம் உறைபனிக்குக் கீழே இருக்கும். 
 

சஹாராவில் அரிதாகவே மழை பொழியும். சில பகுதிகளில் ஒரு துளி மழையைப் பார்க்க, பல ஆண்டுகள்கூட ஆகும்.
 

சஹாராவில் உள்ள சில குன்றுகளின் உயரம் சுமார் 500 அடி. உப்பு அடுக்குகளால் ஆன பகுதிகளும் உள்ளன. பாலைவனச் சோலைகளும் இருக்கின்றன

சஹாரா முழுவதும் சுமார் 25 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஒட்டகத்தில் பயணம் செய்கின்றனர். 
 

பாலைவனத்தில் வாழ்வது கடினம் என்றாலும், சஹாராவில் சில முக்கியமான நாகரிகங்கள் உருவாகியுள்ளன.
 

சஹாராவில் அதிகம் பேசப்படும் மொழி அரபு. ‘சஹாரா’ என்றால் அரபு மொழியில் பாலைவனம் என்று அர்த்தம். 
 

முன்பொரு காலத்தில் சஹாரா, பசுமையான பகுதி. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வறண்டு போக ஆரம்பித்தது. | தொகுப்பு: ஸ்நேகா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in