Why do they put colored dots under newspapers?
Why do they put colored dots under newspapers?

செய்தித்தாள் அடியில் வண்ணப் புள்ளிகள் ஏன்?

Updated on
2 min read

செய்தித்தாள்களில் வண்ணப் படங்களும் உண்டு, கறுப்பு எழுத்துகளும் உண்டு. எனவே அச்சடிக்கும்போது படங்களும் எழுத்துகளும் வரவேண்டும்.

நான்கு வண்ணங்களைக் (cyan, magenta, yellow, black -CMYK) கொண்ட தனித்தனி சிடிபி எனப்படும் அலுமினியம் பிளேட்களில் அச்சு எடுக்கப்பட்டு, அச்சு இயந்திரத்தில் ஓட்டப்படுகின்றன.

சயான், மெஜந்தா, யெல்லோ, பிளாக் வண்ணங்களைத் தாளில் புள்ளிகளாக வைத்து, சரியாக இருக்கிறதா என்று பார்த்து, நான்கு பிளேட்களையும் ஓட்டுவார்கள்.
 

தாளின் கீழ் நான்கு வண்ணங்களும் சரியாக இருந்தால், தாளிலும் அது சரியாக அச்சாகும். இதற்காகவே அந்த வண்ணப்புள்ளிகள் வைக்கப்படுகின்றன. இது, அச்சகப் பணிக்கானது.
 

செய்தித்தாள்கள் மட்டுமல்ல, பத்திரிகைகள் உள்பட வண்ணத்தில் அச்சாகும் அனைத்துக்கும் கீழே இந்த வண்ணப்புள்ளிகள் இருக்கும். 
 

பத்திரிகைகளில் எல்லாம் வண்ணப்புள்ளிகளை வெட்டிவிடுவதால், நம் கண்களுக்குத் தெரிவதில்லை.
 

CMYK என்பதில் கறுப்புக்கு B என்றுதானே வரவேண்டும், ஏன் K என்று இருக்கிறது என உங்களுக்கு தோன்றுகிறது அல்லவா?
 

அடிப்படை ஏழு வண்ணங்களில் Blue வண்ணத்துக்கு B வந்துவிடுவதால், கறுப்புக்கு Key note என்று ஐரோப்பாவில் சொல்லப்பட்டதால், K என்று பயன்படுத்தப்படுகிறது. 
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in