Arctic wonder!
Arctic wonder!

ஆர்க்டிக் எனும் அதிசயம்!

Updated on
2 min read

பூமியின் வட பகுதியில் அமைந்திருக்கிறது ஆர்க்டிக். ஆர்க்டிக்கில் வசிக்கும் பழங்குடி மக்கள் கடினமான சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
 

'ஆர்க்டிக்' என்ற பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. 'கரடி' என்று பொருள். புவி வெப்பமடைதல் காரணமாக ஆர்க்டிக் பகுதி சுருங்கி வருகிறது.
 

ஆர்க்டிக்கின் சற்று வெப்பமான பகுதிகளில் மூலிகைகள், பாசிகள் வளர்கின்றன. துருவ நரி, அணில், சீல் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் ஆர்க்டிக்கில் வாழ்கின்றன.

நார்வால் எனப்படும் தந்தம் மூக்கு திமிங்கிலம் காணப்படுகிறது. துருவக் கரடிகள் கரடி இனங்களில் மிகவும் பெரியது. கரிபு மான்களும் இங்கே காணப்படுகின்றன.
 

ஆர்க்டிக்கில் மீன், எண்ணெய் உள்பட பல இயற்கை வளங்கள் உள்ளன. ஆர்க்டிக்கின் பனிக்கட்டியானது உலகின் நன்னீரில் 10 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

ஆர்க்டிக்கில் உருவாகும் துருவ ஒளி கண்களைக் கவரும். இது இயற்கையாக உருவாகும். வடதுருவத்தில் ஏற்படுவதால் வடதுருவ ஒளி (Aurora Borealis) என்று அழைக்கப்படுகிறது. 
 

சூரியனிலிருந்து வரும் துகள்களும் பூமியிலிருந்து கிளம்பும் காந்தப்புலமும் வேகமாகச் சேரும்போது துருவ ஒளி ஏற்படுகிறது.
 

பூமியின் சாய்வு காரணமாக ஆண்டுக்கு ஒரு நாள் முழு இருளிலும் ஒரு நாள் முழு சூரிய ஒளியிலும் இருக்கும். | தொகுப்பு: ஆதன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in