Can prana attack humans?
Can prana attack humans?

மனிதர்களைத் தாக்குமா பிரானா?

Updated on
2 min read

பிரானா மிகவும் மூர்க்கமான மீன் என்று இதைச் சொல்வார்கள். உண்மையில் பிரானா மீன்களின் குணங்கள் என்ன? அதுகுறித்துப் பார்க்கலாம். 

‘பிரானா’ என்றால் அமேசான் பழங்குடி மொழியில் ‘மீன் பல்’ என்று அர்த்தமாம். இவை தென் அமெரிக்க ஆறுகளில் காணப்படும். 
 

பிரானா மீன்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் அவற்றின் பற்கள் எதையும் கடித்துக் கிழிக்கக்கூடிய அளவுக்கு மிகவும் கூர்மையானவை.

தாடைகளும் வலிமையானவை. அதனால் தங்களைவிடப் பெரிய விலங்குகளைக்கூட இவை கூட்டமாகச் சென்று வேட்டையாடிவிடுகின்றன.
 

பிரானா மீன்களில் சிவப்பு வயிறு பிரானாக்கள்தாம் அதிக வலிமையுடையவை. தாக்குதலில் எதிரியை திக்குமுக்காட வைத்துவிடும். 

பிரானாக்கள் எப்போதும் கூட்டமாகவே இரை தேடிச் செல்கின்றன. இரை அகப்பட்டால் வெகு விரைவில் சதையைத் தின்று, எலும்பை மட்டும் விட்டுவிடுகின்றன. 
 

மனிதர்கள் மீதும் பிரானாக்கள் தாக்குதல் நடத்துவதாகச் சொன்னாலும், அதில் உண்மை இல்லை என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.
 

ஆற்றில் தவறி விழுந்து இறந்தவர்கள், மாரடைப்பால் இறந்தவர்களைத்தான் பிரானாக்கள் இரையாக்கியிருக்கின்றன.

பிரானாக்கள் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 1000 மீன்கள்  இருக்கும். எல்லாப் பிரானாவும் அபாயகரமானவை அல்ல. சைவ பிரானாவும் உண்டு. 
 

இரை கிடைக்காவிட்டால், பிரானா மீன்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு, சக மீன்களைக் கொன்று சாப்பிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in