Oxygen
Oxygen

‘ஆக்சிஜன்’ - சில தகவல்கள்

Updated on
3 min read

உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத வாயு ஆக்சிஜன். அதே ஆக்சிஜன்தான் நமது உடலை அழிக்கும் மிக ஆபத்தான வாயு என்கின்றனர் விஞ்ஞானிகள்.
 

சுத்தமான ஆக்சிஜன் நச்சு வாய்ந்தது. நமது நுரையீரல், நரம்பு மண்டலம் இரண்டுக்கும் சேதம் விளைவித்து, உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியது.

ஆக்சிஜனால் நமது உடல் பாதிக்கக்கூடிய நிலையை ஹைபர்ஆக்சியா (Hyperoxia) என்கிறோம். ஆனால், ஆக்சிஜன் ஏன் ஆபத்தாகிறது?

நாம் சுவாசிப்பது ஆக்சிஜனை மட்டுமல்ல. நாம் சுவாசிக்கும் காற்றில் ஆக்சிஜனோடு 78% நைட்ரஜன், 0.04% கார்பன்-டை-ஆக்சைடு கலவையைத்தான்  சுவாசிக்கிறோம்.

ஆக்சிஜன் உடலின் ரத்தச் சிவப்பணுக்களிலுள்ள ஹீமோகுளோபினால் ஈர்க்கப்பட்டு, ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகிறது. ஹீமோகுளோபின் மூலம் அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச்செல்கிறது.

ஆக்சிஜன் நாம் சாப்பிடும் உணவில் உள்ள குளுக்கோஸுடன் இணைந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தயாரிக்கிறது. இந்தச் செயல்பாட்டைத்தான் செல் சுவாசம் என்கிறோம்.
 

இந்த செல் சுவாசம் நடைபெறும்போது வேறு சில மூலக்கூறுகளும் உற்பத்தியாகின்றன. அவை நிலையற்றவை. இவற்றை ஒற்றை அயனி (Free Radicals) என்கிறோம்.
 

இந்தத் ஒற்றை அயனி நிலையில்லாதவை. இதனால், அவை நிலைபெறுவதற்காக வினைபுரிவதைத்தான் ஆக்சிஜனேற்றம் என்கிறோம். இந்தச் செயல்பாடுதான் உடலுக்குக் கேடானது.
 

சுத்தமான ஆக்சிஜனை மட்டும் சுவாசித்தால், முதலில் நுரையீரலில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கத் தொடங்கும். இறுதியாக உயிருக்கே ஆபத்தாக முடியும்.

காற்றில் கலந்துள்ள ஆக்சிஜனைச் சுவாசிக்கும்போது இது நடப்பதில்லை. அத்துடன் காற்றில் உள்ள நைட்ரஜனும் நமது நுரையீரலைப் பாதுகாக்கிறது. 
 
 

சுத்தமான ஆக்சிஜன் மட்டும் இருந்தால் நுரையீரலில் உள்ள காற்றின் அழுத்தத்தை மாற்றி, அந்த உறுப்பையே சிதைத்துவிடும். நாம் சுத்தமான ஆக்சிஜனைச் சுவாசிப்பதில்லை.

மருத்துவமனையில் தூய ஆக்சிஜனைப் பயன்படுத்துகிறோம். அந்த ஆக்சிஜன் அளவும் மருத்துவருடைய கண்காணிப்பில் தரப்படுவதால் பாதிப்பும் ஏற்படுவதில்லை. | தகவல்கள்: நன்மாறன் திருநாவுக்கரசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in