space
space

விண்வெளி குளிருமா?

Updated on
2 min read

விண்வெளி பிரம்மாண்டமானது. அங்கே கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் எரிந்துகொண்டு இருக்கின்றன. அவற்றில் ஒரு நட்சத்திரம்தான் சூரியன்.
 

சூரியன் பூமிக்குமான இடைவெளி சுமார் 15 கோடி கிலோ மீட்டர்கள். ஆனால், அவ்வளவு தொலைவில் இருந்தும் சூரியனின் வெப்பம் பூமியைக் கடுமையாக வாட்டுகிறது.
 

ஒரு சூரியனுக்கே இந்த நிலை என்றால், விண்வெளி முழுவதும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. அப்படியானால், விண்வெளி குளிர்ச்சியாக இருக்குமா? 

உண்மையில் விண்வெளி குளிராகவும் இருக்காது, வெப்பமாகவும் இருக்காது. விண்வெளி என்பது எதுவும் அற்ற வெளி. அது ஒரு வெற்றிடம். வெற்றிடத்தில் வெப்பத்தை உணரமுடியாது.  
 

விண்வெளி எங்கும் நட்சத்திரங்கள் இருந்தும் வெப்பம் பரவாததற்கு முதல் காரணம், அது வெற்றிடம் என்பதுதான்.

விண்வெளிப் பொருள்கள் அனைத்தும் நட்சத்திரங்களிடம் இருந்து வெப்பத்தைப் பெற்றாலும் அவை வெப்பத்தைத் தொடர்ந்து இழப்பதால் குளிர்ந்துவிடுகின்றன.

விண்வெளியில் வெப்பம் அதிகரிக்காததற்கு இன்னொரு காரணம், நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் தொலைவு மிக மிக அதிகம்.
 

நிறைய நட்சத்திரங்கள் அருகருகே இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், அவற்றுக்கு இடையேயான தொலைவு கோடிக்கணக்கான கிலோ மீட்டர்களாக இருக்கும். | தகவல்கள்: நன்மாறன் திருநாவுக்கரசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in