Many kinds of eggs!
Many kinds of eggs!

முட்டைகள் பலவிதம்!

Updated on
2 min read

பறவைகள் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கக் கூடியவை. ஒரு குஞ்சு உருவாவதற்குத் தேவையான சத்துகள் அனைத்தும் ஓரிடத்தில் வைக்கப்பட்டு முட்டை உருவாகிறது.
 

ஒவ்வொரு வகைப் பறவைக்கும் முட்டையின் அளவும் வண்ணமும் வேறுபடும். எடையும் மாறுபடும்.

மிகப் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் முட்டை 1.4 கிலோ முதல் 2.3 கிலோ வரை எடை இருக்கும்.  
 

பறக்க, நீந்த வேண்டிய தேவை பறவைகளுக்கு இருப்பதால் உடல் எடையைச் சரியாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கின்றன.
 

வாத்து முட்டையின் மஞ்சள் கரு கோழி முட்டையின் மஞ்சள் கருவைவிடப் பெரிதாக இருக்கும். இதில், வாத்து குஞ்சுக்கு அதிகமான சத்துகள் தேவைப்படுகின்றன.
 

முட்டைகள் மீது அமர்ந்து தாய்ப் பறவை அடைகாக்கும்போது முட்டைகளுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கிறது.  அடைகாக்கும் காலம் பறவைகளுக்குப் பறவை வேறுபடும். 
 

பெரிய பறவைகளுக்கு இந்த அடைகாக்கும் காலம் அதிகமாகவும், சிறிய பறவைகளுக்குக் குறைவாகவும் தேவைப்படும்.
 

கடல் பறவையான அல்பட்ராஸ் 11 வாரங்கள் வரை முட்டையை அடைகாக்கும். சிட்டுக்குருவி 2 வாரங்கள் மட்டுமே அடைகாக்கும். 
 

கோழி தினமும் ஒரு முட்டை எனக் குறிப்பிட்ட காலத்துக்கு இடுகிறது. காட்டுக்கோழி ஒரே நேரத்தில் சில முட்டைகளை இடுகிறது.  

முட்டைகளை அடைகாப்பதற்குக் கூடு கட்டும் பறவைகளும் இருக்கின்றன. மற்ற பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் பறவைகளும் இருக்கின்றன. | தகவல்கள்: பெ.சசிக்குமார்
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in