Tulsi worship to increase happiness
Tulsi worship to increase happiness

மகிழ்ச்சி பெருக துளசி வழிபாடு

Updated on
2 min read

துளசி வழிபாடு ஆன்ம பலத்துடன் தேக பலத்தையும் அளிக்கும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. இறைவனுக்கு பிரியமான துளசிக்கு ‘பிருந்தா’ என்றும் பெயர்.

தினமும் துளசி மாடங்களில் தீபம் ஏற்றி வைத்து வணங்கினால் இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கி, மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம்.

மகத்துவம் வாய்ந்த துளசி, பூமிக்கு 24 மணி நேரமும் பிராணவாயுவை மட்டுமே தரும் சிறப்பு வாய்ந்தது.

துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம், நம் சுவாசம் ஆரோக்கியமாகி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 
 

பச்சை துளசி, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் கலந்த தீர்த்தத்தை அருந்தும்போது, நம் உடலில் அது ஒரு சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது.
 

லட்சுமிதேவியின் அவதாரமாக துளசி செடி கருதப்படுகிறது. எதிர்மறை ஆற்றல்களை ஒழிக்க வல்ல துளசி, இருமல், சளி நோய்களை எதிர்த்துப் போராடுகிறது.
 

உலகில் 200-க்கும் அதிகமான துளசி வகைகள் உள்ளன. உருவ அமைப்பு வேறுபட்டு இருந்தாலும், அவற்றின் பலன்கள் ஒன்றாகத்தான் உள்ளன.
 

பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோன் வாயுவை துளசி வெளிவிடுகிறது. 
 

வீட்டின் நுழைவாயில், பால்கனி, மொட்டை மாடியில் துளசி செடியை வளர்ப்பதன் மூலம் தூய்மையான பிராணவாயுவை பெறலாம்.| தகவல்கள்: ரங்க ராமானுஜ தாஸன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in