indian cobra
indian cobra

நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவது எதற்காக?

Updated on
2 min read

நல்ல பாம்பு, நாகம் என அழைக்கப்படுகிறது. இது நஞ்சுப் பாம்பு. நம் நாட்டில் நான்கு முக்கிய நஞ்சுப் பாம்புகளில் இதுவும் ஒன்று. 

இது தரைவாழ் பாம்பு என்பதால் வயல்வெளிகள், தோட்டங்கள், விறகுக் குவியல், கற்குவியல், எலி வளை என மறைந்து வாழக்கூடிய இடத்திலெல்லாம் வாழும். 
 

நீர், இரை, தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் அமைந்தால் மனிதக் குடியிருப்புக்கு அருகிலேகூட இது தங்கிவிடும். இருந்தாலும், மனிதர்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புகிறது.

சில நல்ல பாம்புகள் 4, 5 கோழி முட்டைகளை முழுவதுமாக விழுங்கும். இரையின் மீது நஞ்சைச் செலுத்திச் செயலிழக்கவைத்து உயிருடன் விழுங்கும்.

நல்ல பாம்பின் நஞ்சு (venom) நரம்பு மண்டலத்தைத் தாக்கும் (Neurotoxic). இக்கடியால் இறுதியில் இதயக் கோளாறுகளை (மாரடைப்பு) எதிர்கொண்டு இறக்க நேரிடலாம்.
 

நல்ல பாம்பின் நஞ்சு வேகமாகச் செயல்படும். காலம் தாழ்த்தாமல் பாம்புக்கடிக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும்.
 

பாம்புகள் கடிப்பதால் உடனே யாரும் மரணிப்பது இல்லை. விழிப்புணர்வுடன் உரிய நேரத்தில் சிகிச்சையைப் பெற்றால், பாதிப்பிலிருந்து தப்பிவிடலாம்.
 

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்பொழுதும்கூடச் சட்டென்று தாக்காது. எச்சரித்தபடியே இருக்கும். யாரும் தாக்க முனையாதபோது, மெல்லத் தணிந்து அந்த இடத்திலிருந்து அகன்றுவிடும்.
 

தொந்தரவு ஏற்பட்டால் உடனே கடிக்காமல் மூடிய வாயால் அல்லது படத்தால் (Hood) எதிரியைத் தாக்கி பயம்கொள்ளச் செய்யும். 
 

சில நேரம் பொய்க்கடி (dry bite) கடிக்கும். இதனால், உடலில் நஞ்சு செலுத்தப்படாது. இதைத் தாண்டித் தனக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதும்போது கடித்துவிடும்.
 

பாம்புகளால் அதிகம் கடிபடுவதற்குக் காரணம் இவற்றின் எண்ணிக்கையும், பரவலாக இருப்பதுமே. நம் அலட்சியமும் மற்றொரு முக்கியக் காரணம். | தகவல்கள்: மா.ரமேஸ்வரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in