Can eating chocolate cause pimples?
Can eating chocolate cause pimples?

சாக்லேட் சாப்பிட்டால் பருக்கள் கூடுமா?

Updated on
2 min read

‘சாக்லேட் சாப்பிட்டால் பருக்கள் அதிகமாகும்’ என்பது  சரியே. பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு.

குறிப்பாக, சாக்லேட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கும் பருக்கள் கூடுவதற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

ஒயிட் சாக்லேட், டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட் எனச் சாக்லேட்கள் மூன்று வகைப்படும். எல்லாச் சாக்லேட்களும் கொழுப்புச் சுரங்கம்தான். 
 

100 கிராம் சாக்லேட்டில் 30 - 40 கிராம் கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்பு செறிவுற்ற கொழுப்பு (Saturated fat) வகையைச் சேர்ந்தது, கொழுப்பு அமிலம் மிகுந்தது. 
 

சாக்லேட்டில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகம். 100 கிராம் சாக்லேட்டில் 23 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. 

சாக்லெட் சாப்பிடுவதால், எண்ணெய்ச் சுரப்பிகளுக்கு நல்ல ‘தீனி’ கிடைத்துவிடும். இதனால் அவை சீக்கிரத்தில் மூடிக்கொள்ளும். 
 

எண்ணெய்ச் சுரப்பிகளுக்கு ‘தீனி’ கிடைப்பதால், ஏற்கெனவே பருக்கள் இருந்தால் அவை அதிகரிக்கும்; புதிதாகவும் பருக்கள் தோன்றும். 

ஆகவே, முகத்தில் பரு இருப்பவர்கள், சாக்லேட்டை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. | கைடன்ஸ்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in