5 strategies to follow to live rich!
5 strategies to follow to live rich!

பணக்காரராக வாழ 5 உத்திகள்!

Updated on
2 min read

“அப்போது 10 ஆயிரம்... இப்போது 50 ஆயிரம் சம்பளம். இப்போதும் பணம் போதவில்லை.. என்னடா வாழ்க்கை?” என்று புலம்புபவரா நீங்கள்?

பார்கின்சன் விதி தெறியுமா? "அதிகரிக்கும் வருமானத்துக்கு ஏற்ப, ஒருவரது செலவுகளும் தொடர்ந்து அதிகரிக்கும்" என்கிறார் பார்கின்சன்.
 

"ஒருவர் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறாரோ அதைவிட சற்று ‘அதிகமாகவே அவர் செலவழிப்பார்" என்கிறார் பார்கின்சன்.

உளவியல் ரீதியாக, இது சராசரி மனிதர்களின் மனோபாவம். இதைக் கடப்பவர்களே பணக்காரர்கள் ஆகிறார்கள். இதோ.. பணக்காரர்கள் பின்பற்றும் 5 உத்திகள்

1. வருமானத்தில் 50% மட்டுமே தன்னுடைய பணம் என எண்ணி பணக்காரர்கள் செலவழிக்கிறார்கள். மீதமுள்ள 50% பணத்தை எதிர்காலத்துக்காக சேமிக்கிறார்கள்.
 

2. சேமிப்பைத் தொடர ஒரு முறை உள்ளது. பணக்காரர்கள் வங்கிகளுக்கு சேமிப்புக்கும், ஸ்டாண்டிங் இன்ஸ்டிரக்‌ஷன்  கொடுத்து விடுவர். தானாகவே சேமிப்புக்கு சென்றுவிடும்.
 

3. பணக்காரர்கள் எந்தப் பொருளை வாங்கும் போதும் பேரம் பேசத் தவறுவதில்லை. மேலும் தேவையற்ற பொருட்களை வாங்குவதையும் அறவே தவிர்க்கிறார்கள்.

4. வருமானம் தரக்கூடிய, செலவைக் குறைக்கக்கூடிய எந்தப் பொருளையும் தவணை முறையில் வாங்குவதில் தவறில்லை. அவற்றின் மூலமே கடனை அடைத்து விடலாம்.

5. பணக்காரர்கள், ஏழைகளைப் போல வாழ்கிறார்கள். ஆனால் பணக்காரர்களைப் போல சேமிக்கிறார்கள். குறைவாகப் பணம் சம்பாதிப்பதில் தவறில்லை. 
 

ஆரம்ப காலத்தில் ஏழைகளைப்போல வாழப் பழகிக்கொண்டால் ஓய்வுக்குப் பிறகு, பணக்காரர்களைப் போல் வாழலாம்.  | தகவல்: இராம்குமார் சிங்காரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in