Electricity: Safety measures to follow during rainy season
Electricity: Safety measures to follow during rainy season

மின்சாரம்: மழைக் கால உஷார் டிப்ஸ்

Updated on
2 min read

மழைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். இதோ...

மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.

உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும்.

டிவி ஆன்டனா, கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம்.
 

வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள் தொடாத வகையில் அமைத்து பராமரிக்க வேண்டும்.

சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.
 

மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும்.

கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்.

மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.
 

அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.

இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
 

இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in