Actress Anna Ben Latest Album
சினிமா
அசத்தும் அன்னா பென் க்ளிக்ஸ்
மலையாள திரையுலகின் வளர்ந்து வரும் திரை நட்சத்திரம் அன்னா பென்.
திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி. நாயரம்பலத்தின் மகளான இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
2019 -ல் வெளியான 'கும்பளாங்கி நைட்ஸ்' மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
2019 -ல் வெளியான 'ஹெலன்' மற்றும் 2020 -ல் வெளியான 'கப்பேலா' ஆகிய படங்களுக்காக இவருக்கு கேரள அரசின் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன.
பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்தார்.
குறிப்பாக அண்மையில் வெளியான ‘கொட்டுக்காளி’ படத்தில் சூரியுடன் இணைந்து மிரட்டலான நடிப்பை வழங்கியிருந்தார் அன்னா பென். இதன் மூலம் அவர் பரவலான கவனத்தை ஈர்த்தார்.
