Can ear buds be used?
Can ear buds be used?

காது குடைய பட்ஸ் ஆபத்தா?

Updated on
2 min read

காது குரும்பியில் தண்ணீர் பட்டால் உப்பிவிடும். இதனால் காது சரியாகக் கேட்காது. குரும்பியை `பட்ஸ்’ கொண்டு அகற்றாமல் மருத்துவர் அகற்றுவதுதான் சரி.

காது குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காரணம், காது குடைவதில் கிடைக்கும் சுகம். ஆனால், இது ஆபத்தானது.

பட்ஸை வைத்துக் காதை குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழிவகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனைக் காது இழந்துவிடும். 

தவறுதலாகச் செவிப்பறையில் `பட்ஸ்’ பட்டு கிழித்துவிட்டால், காது கேட்காமல் போகும் ஆபத்துள்ளது. அதனால் பட்ஸால் காது குடைவதைத் தவிர்ப்பீர்.

காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்கவேண்டும். இதற்கு இயற்கை தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி. 
 

காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள் செவிப்பறையைப் பாதிக்காதபடி தடுப்பது, இந்தக் குரும்பிதான். இதை அகற்றவேண்டிய அவசியமில்லை. தானாகவே வந்துவிடும்.

குரும்பியை அகற்ற தேங்காய் எண்ணெயைக் காதில் சில சொட்டுகள் விட்டால் குரும்பி ஊறி, தானாகவே வெளியில் வந்துவிடும். 
 

நாட்பட்ட குரும்பி  எண்ணெய் ஊற்றினால் வராது. சிரிஞ்ச் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அகற்றவேண்டும். இதற்கு மருத்துவர் உதவி தேவை.

காதில் எறும்பு, பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய்யின் சொட்டுகள் விட்டால், பூச்சி இறந்து வெளியில் வந்துவிடும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெயைக் காதுக்குள் ஊற்றக் கூடாது. அப்படிச் செய்தால், காது கடுமையாகப் பாதிக்கப்படும். 
 

காதில் சீழ் வடிந்தால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றுவிட வேண்டும். காலம்கடத்தினால், அறுவை சிகிச்சை தான். எச்சரிக்கை. | கைடன்ஸ்: கு.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in