Does applying turmeric on the face cure acne?
Does applying turmeric on the face cure acne?

மஞ்சள் தேய்த்தால் முகப்பரு மறையுமா?

Updated on
2 min read

மஞ்சளை முகத்தில் தேய்த்தால் முகப்பரு மறையும் என்று கூறுவதற்கு நவீன மருத்துவத்தில் ஆதாரம் இல்லை.

முகப்பருவைப் பொறுத்தவரை அதைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, அதைக் கிள்ளாமல் இருக்க வேண்டும்.

இளம் சூடான தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

முகத்தைத் துடைத்துச் சுத்தப்படுத்துவதற்கு எனத் தனியாக ஒரு துண்டு பயன்படுத்தப்பட வேண்டும்.

மருத்துவர் ஆலோசனைப்படி மேற்பூச்சுக் களிம்புகளையும் சில நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும்.
 

உங்கள் முகப்பருவுக்கு ‘சினைப்பை நீர்க்கட்டி’ காரணமா எனத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற வேண்டும். 
 

முகப்பருவுக்குக் காரணம் தெரியாமல்,‘கூகுள் டாக்ட’ரிடம் கேட்டோ, ‘யூடியூபர்’களிடம் கேட்டோ சுயமாக எதையும் முகப்பருவில் பூசாதீர்கள்.

சுய வைத்தியம் முகப்பருவிற்கு தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in