To prevent acne - some important tips
To prevent acne - some important tips

முகப்பரு வராமல் தடுக்க… - சில முக்கியக் குறிப்புகள்

Updated on
2 min read

முகத்தில் எந்தக் களிம்பு பூசினாலும், 20 நிமிடம் மேல் வைக்கக் கூடாது. ஏனெனில், தூசு ஒட்டும்; எண்ணெய் சுரப்பிகள் அடைபட்டு முகப்பரு வரும். 
 

தினமும் குறைந்தது 3 முறை சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் முகம் கழுவுங்கள். தினமும் 2 முறை வெந்நீரில் ஆவி பிடிக்கலாம். 
 

சந்தனச் சோப்பு நல்லது. அடிக்கடி சோப்பை மாற்றக் கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால், மிகவும் அழுத்தாமல் துடைக்கலாம்.

முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் உள்ளவர்கள் பவுடர், களிம்புகளைப் பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசிக்க வேண்டும்.

எந்நேரமும் பருக்களை விரல்களால் நோண்டுவதை கைவிடுங்கள். பருக்களைக் கிள்ளாதீர்கள்; பிதுக்காதீர்கள்.

நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
 

கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், பீட்சா, பர்கர் தவிர்க்கலாம்.

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு, எண்ணெய் பலகாரத்தை ஓரங்கட்டுங்கள். | கைடன்ஸ்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in