save sea
save sea

கடலை பாதுகாக்க சில வழிகள்!

Updated on
2 min read

கடலில் சேரும் குப்பைகள் உலகளவில் பெரிய சவாலான பிரச்சனை. வரும் தலைமுறையினருக்காக கடலை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடற்கரை பகுதிகளில் கைவிடப்பட்ட, வீணடிக்கப்பட்ட தூக்கிவீசப்பட்ட, ஓதுங்கிய பொருட்கள் குப்பைகளாக மாறுகின்றன. 99% கடல் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்களாகும்.

ஆண்டுதோறும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் நுழைகின்றன. பெருங்கடல்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், மனித நல்வாழ்வை அச்சுறுத்துகிறது.

கடலோரப் பகுதிகளில் 3 விதங்களில் குப்பைகள் சேருகின்றன. நிலம் சார்ந்த ஆதாரங்கள், கடல் சார்ந்த ஆதாரங்கள், இயற்கை காரணிகள்.

கடல் குப்பைகள் மனித நல்வாழ்வுக்கான தீங்குகளை விளைவிப்பதுடன் கடல் சார்ந்த பல்லுயிர்களுக்கு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

கடல் குப்பைகளை திறம்பட சமாளிக்க வேண்டுமானால், தொடர்ச்சியான சமூக ஈடுபாடு, மிக முக்கியமாக, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி தேவை.

கடல் குப்பைகளை எதிர்த்துபபோராடுவதிலும் பெருங்கடல்களைப் பாதுகாப்பதிலும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
 

ஒவ்வொரு நாளும் கடலோர சுத்தப்படுத்தும் நாளாக மாறும் வகையில் ஒரு முழுமையான அணுகுமுறையை உருவாக்கினால் தான் கடலை காப்பாற்ற முடியும்.
 

செப்டம்பர் 21 : சர்வதேச கடல் தூய்மை தினம். | தொகுப்பு: சி .வேல்விழி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in