Actress Shruti Haasan Latest Click
சினிமா
டக்கரான ‘டார்க் மோடு’ ஸ்ருதி ஹாசன் க்ளிக்ஸ்
பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என திரைத் துறையில் பன்முகக் கலைஞராக வலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன்.
நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன், திரைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தி வருகிறார்.
ஸ்ருதி ஹாசன் தனது 6 வயதில் முதல் பாடலை பாடினார். 1992-ல் ‘தேவர் மகன்’ படத்தில் ‘போற்றிப் பாடடி’ பாடலை அவர் பாடினார்.
2009-ல் வெளியான ‘உன்னைபோல் ஒருவன்’ படத்துக்கு ஸ்ருதி ஹாசன் இசை அமைத்தார்.
2011-ல் வெளியான ‘ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார் ஸ்ருதி ஹாசன்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
