Why do people want to live in groups?
Why do people want to live in groups?

மனிதன் கூட்டமாக வாழ விரும்புவது ஏன்?

Updated on
2 min read

மனித இனம் ஒரு சமூக உயிரினம். உயிரினங்கள் கூட்டமாக வாழ்வது பாதுகாப்புக்காகவும் பரஸ்பர உதவிக்காகவும் உருவான ஒரு நடவடிக்கை.

தனியாக இருக்கும்போது இயலாத பல செயல்களை கூட்டமாகச் சேரும்போது செய்ய வசதியாக அமைவதால்தான் மனித இனம் கூட்டமாக வாழ்வதையே விரும்புகிறது.
 

உயிரினங்களிலேயே பலம் வாய்ந்த யானைகள் கூடக் கூட்டமாக இருப்பதற்கு விரும்புகின்றன என்றால், மனிதர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 

மற்றவருடன் தொடர்பு கொள்ளும் உந்துதலே மொழி பிறக்கக் காரணம். பண்பாடு போன்றவை உருவாக காரணம், தனி மனிதன் சமூகமயமாக மாறியதால்தான்.
 

தனியாக இருக்கும்போது கிடைக்காத பாதுகாப்பு உணர்வும் நிம்மதியும் ‘கூட்டத்தில் ஒருவனாய்' இருக்கும்போது கிடைக்கிறது.

பாதுகாப்பு காரணமாகவே சமூகத்தில் ஒருவனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற உந்துதல் மனிதனுக்கு ஆதி காலம் தொட்டே இருந்து வருகிறது. 

சமூகத்தில் ஒருவனாகும் விழைவே சாதி, மதம், இனம், மொழி, தேசம் போன்ற ஏதோ ஒரு குழுவுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான்.
 

குழு உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் பெற விழைகிறான். அதில் சரி, தவறு என பல விஷயங்களில் பொதுப் புரிதல், உடன்படிக்கை மற்றவர்களோடு ஏற்படுகின்றன.

சமூக அங்கீகாரம் பெறவேண்டும் என்னும் விழைவு , அது கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பதற்றத்தை உருவாக்குகிறது. | தகவல்கள்: டாக்டர் ஜி.ராமானுஜன்
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in