10 reason to must watch thalavan movie ott
10 reason to must watch thalavan movie ott

ஓடிடியில் ‘தலவன்’ பார்க்க 10 காரணங்கள்!

Updated on
2 min read

வழக்கமான த்ரில்லர் கதைதான் என்றாலும், அதனை எந்த இடத்திலும் அயற்சி கொடுக்காமல் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஜிஸ் ஜாய். 

இயக்குநர் சேர்த்திருக்கும் ‘ஈகோ’ ஃப்ளேவர் ருசியை கூட்டுகிறது. பிஜுமேனன் - ஆசிஃப் அலியும் மோதல் காட்சிகள் ‘அய்யப்பன் கோஷி’ நினைவூட்டல்.

பிஜுமேனன் - ஆசிஃப் அலி மோதல் தான்படம் என நினைத்திருக்கும்போது, ‘யூடர்ன்’ அடித்து திரும்பும் திரைக்கதை ரசிக்க வைக்கிறது. 

ஒவ்வொரு நூலாக பிடித்து அடுத்து என்ன என்ற ஆர்வமூட்டும் படம் எங்கேயும் சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பாக நகர்வது பலம். 
 

காவல் துறையின் அதிகார அத்துமீறலையும், அவர்களுக்குள் நிகழும் ‘பழிவாங்கல்’ போக்கையும் அழுத்தமாக பதிய வைக்கிறது படம். 
 

இறுதி வரை யார் தான் கொலையாளி, என்பதை கணிக்க முடியாதபடி, கடக்க வைத்ததில் திரைக்கதை அபாரம். 
 

இறுதியில் குற்றவாளியை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது முழுமையான ‘எங்கேஜிங்’ த்ரில்லராக ரசிக்க வைக்கிறது.

விறைப்பான முகம், எப்போதும் வெடுவெடுப்பு பேச்சு, யாரையும் எதிர்க்கும் குணம், கரிசனமில்லா காவல் துறை அதிகாரியாக மிரட்டுகிறார் பிஜு மேனன். 

நேர்மையை தனது உடையின் ‘ஸ்டார்’களில் ஒன்றாக பொருத்திக் கொண்டு, யாருக்கும் அடிபணியாத, கதாபாத்திரத்தில் ஆசிஃப் அலி சிறப்பாக நடித்துள்ளார். 

இசை, ஒளிப்பதிவு நேர்த்தி. க்ரைம் - த்ரில்லர் ரசிகர்களுக்கான விறுவிறுப்பான ஆடு புலி ஆட்டமான இப்படம் சோனி லிவ் ஓடிடியில் உள்ளது. 
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in