speech therapy health tips
speech therapy health tips

திக்குவாய்: நோயா? உளவியல் குறைபாடா?

Updated on
2 min read

திக்குவாய் ஏற்படுகிறது பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மூளை நரம்புகளின் இணைப்புச் சுற்றுகளில் ஏற்படும் பிரச்சினைகளாலேயே திக்குவாய் ஏற்படுகிறது என்பதுதான் பொதுவான கருத்து.

ஒருவர் பேசுவது அவருக்கே திரும்பக் கேட்டு, அதை வைத்து பேச்சின் வேகத்தை முடிவு செய்யும் பின்னூட்ட (feed back) செயல்பாட்டில் ஏற்படும் கோளாறுகளாலேயே திக்குவாய்  ஏற்படுகிறது.

சில குழந்தைகளுக்குச் சிறு வயதில் திக்குவாய் இருக்கும். பின்னர் சரியாகிவிடும். சிலருக்குப் பதற்றம் அடையும்போது மட்டும் திக்குவாயும், சிலருக்குக் கூட்டத்தில் பேசும்போதும் ஏற்படும்.
 

நாளடைவில் வெளியிடங்களுக்குச் செல்வது, பேசுவது போன்ற விஷயங்களில் திக்குவாய் உள்ளவர்களுக்குப் பதற்றம் ஏற்படலாம். சிலருக்கு பதற்றமின்றிப் பேசும்போதும்கூடத் திக்குவாய் இருக்கும்.

பொதுவாகவே உடலையும் மனத்தையும் பிரிக்க முடியாது. பதற்றம் அதிகரிக்கும்போது திக்குவாய் அதிகரிக்கும். திக்குவாய் இருப்பவர்கள் பேச்சுப் பயிற்சி நிபுணரிடம் பயிற்சி பெற வேண்டும்.
 

பதற்றம் அதிகமாக இருப்பவர்கள் மனநல ஆலோசனை பெறவேண்டும். குறிப்பாக மனதைப் பதற்றமில்லாமல் வைத்துக்கொள்ள, முதலில் தாழ்வு மனப்பான்மையைக் கைவிட வேண்டும்.
 

அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ, திக்கிவிடுமோ என்று பயந்து பேசாமல் இருப்பது, முகத்தைப் பார்த்துப் பேசாமல் இருப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
 

பேசும்போது நிறைய நேரம் எடுத்துக்கொண்டு பேச வேண்டும். தன்னம்பிக்கையுடன் இடைவிடாமல் பயிற்சி செய்தால் திக்குவாயை வெல்லலாம். | தகவல்கள்: ஜி.ராமானுஜம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in