10 benefits of peas
10 benefits of peas

பட்டாணி நல்கும் 10 நன்மைகள்!

Updated on
2 min read

பட்டாணியில் கரையும் நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து அதிகம். ஒரு கோப்பை பட்டாணியில் 19 கிராம் நார்ச்சத்து இருக்கும். இது, குடலைத் தூய்மைப்படுத்தக் கூடியது.

ஒரு கோப்பைப் பட்டாணியில் 16 கிராம் புரதச் சத்து இருக்கிறது. பட்டாணியில் கொழுப்பு குறைவு. அதுவும் பெரும்பாலும் நல்ல கொழுப்பு.

பட்டாணியில் கால்சியம், இரும்புச்சத்து, செம்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், மக்னீஷியம் போன்ற கனிமச்சத்துகள் உண்டு.

பட்டாணியில் உள்ள பைட்டோஸ்டீரால், உடலின் கெட்ட கொழுப்பு அளவை குறைத்து எலும்பை வலுப்படுத்தக் கூடியது.

செரிமானத்தை மேம்படுத்துவதாலும், விரைவாகச் சாப்பிட்ட நிறைவைத் தருவதாலும் எடை குறைப்புக்கும் பட்டாணி உதவும்.

இரும்புச்சத்து குறைபாடு உடையவர்களுக்கு இது நல்ல ஊட்டத்தைக் கொடுக்கவல்லது பட்டாணி.

ரத்தச் சர்க்கரை அளவை சீர்ப் படுத்தும் என்பதால், நீரிழிவு நோயைக் குறைக்கும் தன்மையும் பட்டாணிக்கு உண்டு.

பட்டாணியில் வைட்டமின் சத்துகளும் அதிகம். வைட்டமின் ஏ, வைட்டமின் பி (ஃபோலேட்), வைட்டமின் கே, நியாசின், தயமின் போன்றவை உள்ளன.

பட்டாணியில் ‘வைட்டமின் சி’ மிக அதிகம். இதனால் நோய் தடுப்பாற்றல் பெருகும்.இதன் ‘வைட்டமின் கே’ எலும்பை வலுப்படுத்தும் தன்மை கொண்டது.

உடலுக்கு நன்மை தரும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பீட்டா கரோட்டீன் ஆகியவை பட்டாணியில் பொதிந்து கிடக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in