astami bairavar dharsan
astami bairavar dharsan

அஷ்டமியில் கஷ்டம் தீர... கால பைரவர் வழிபாடு!

Updated on
2 min read

அஷ்டமியில், கஷ்டமெல்லாம் தீர்த்து வைக்கும் பைரவரை தரிசித்து பிரார்த்தனை செய்தால், நம்முடைய பயத்தையெல்லாம் போக்கி அருளுவார் பைரவர். 

பைரவரின் மூலமந்திரம் சொல்லி பாராயணம் செய்து, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளித்தால் கடன் தொல்லைகள் நீங்கும். எதிரிகள் வலுவிழப்பர் என்பது ஐதீகம்.
 

ஒவ்வொரு நாளும் திதி உண்டு. முருகனுக்கு உகந்தது சஷ்டி திதி. சஷ்டியில் முருகக் கடவுளை நினைத்து விரதம் இருப்பார்கள். பூஜிப்பார்கள். கந்தனை தரிசிப்பார்கள். 
 

சதுர்த்தசி பிள்ளையாருக்கு விசேஷம். இதைத்தான் ஆவணி மாதத்தில் விநாயக சதுர்த்தி என்றும் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி என்றும் வழிபடுகிறோம்.

ஏகாதசி திதி என்பது பெருமாளுக்கு உகந்த நாள். இந்த நாளில் பெருமாள் வழிபாடு மிக மிக உன்னதமானது. துளசி தீர்த்தம் பருகுவதும் புண்ணியங்களைப் பெற்றுத் தரும்.
 

திரயோதசி என்பது சிவ வழிபாட்டுக்கு உரிய நாள். இதுவே பிரதோஷம் என்று வழிபடப்படுகிறது. சிவாலயங்களில் சிவலிங்கத் திருமேனிக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
 

எந்த தீய சக்தியும் நம்மை நெருங்கவிடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது. 
 

அஷ்டமி, பைரவர் பெருமானுக்கான நாள். நம்மைச் சுற்றியுள்ள எட்டுத்திசைகளில் இருந்தும் வருகிற தீய சக்திகளை விரட்டி அருளும் வல்லமை கொண்டவர் பைரவர்.   

தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டுக்கு உகந்தது என்றாலும் வளர்பிறை அஷ்டமியும் பைரவருக்கான நன்னாள்தான்.

பொதுவாகவே பைரவரை ராகு காலத்தில் வழிபடுவது சிறப்பு. ஆனால், வளர்பிறை அஷ்டமி திதியில் ராகுகாலத்தை கணக்கில் கொள்ள வேண்டாம். எந்த நேரத்திலும்  வழிபடலாம். | தொகுப்பு: வி.ராம்ஜி 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in