malavika to trisha cameo dance tamil cinema
malavika to trisha cameo dance tamil cinema

மாளவிகா to த்ரிஷா: கேமியோ டான்ஸில் கலக்கிய நாயகிகள்!

Updated on
2 min read

‘சித்திரம் பேசுதடி’ படத்தில் நடிகை மாளவிகா “வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” பாடலுக்கு நடனமாடியிருந்தார். 

விஜய்யின் ‘யூத்’ படத்தில் நடிகை சிம்ரன் “ஆள்தோட்ட பூபதி நானடா” பாடலில் நடனத்தில் மிரட்டியிருந்தார். 

அஜித்தின் ‘தீனா’ படத்தில் “வத்திக்குச்சு பத்திக்காதுடா” பாடலில் நக்மாவின் சிறப்பு நடனம் கவனம் ஈர்த்தது. 

மாதவனின் ‘ஜே ஜே’ படத்தில் “மே மாசம் 98ல் மேஜர் ஆனேனே” பாடலுக்கு ரீமா சென் சிறப்பு நடனம் ஆடியிருந்தார். 

விஜய்யின் ‘ஷாஜஹான்’ படத்தில் “சரக்கு வைச்சிருக்கேன்” பாடலுக்கு  மீனா ஆடிய நடனம் ரசிகர்களுக்கு விருந்து. 

விஜய்யின் ‘சிவகாசி’ படத்தில் ‘‘கோடம்பாக்கம் ஏரியா” பாடலில் நயன்தாரா நடனம் உற்சாகம் கூட்டியது. 

சிம்புவின் ‘ஒஸ்தி’ படத்தில் “கலாசலா” பாடலுக்கு நடிகை மல்லிகா ஷெராவத்தின் நடனமும், பாடலும் பெரும் ஹிட்டடித்தது.

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தில் "ஊ சொல்றீயா” பாடலுக்கான சமந்தாவின் நடனம் அல்டிமேட் ரகம். 

சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் நடிகை சாய்ஷா ‘ராவடி’ பாடலுக்கு ஆடியிருந்தார். சமந்தாவின் நடனத்தை ஈடுக்கட்ட முயன்றார். 

விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் ‘மட்ட’ பாடலில் நடிகை த்ரிஷாவின் நடனம் ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in